தலைமுறை தலைமுறையாக
சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (சி. இ. ஜி) 1976 ஆம் ஆண்டு படிப்பை முடித்த நானும் சக மாணவர்களும் நடத்திய 50 ஆண்டு வகுப்பு மறு இணைப்பில்பங்கு பெற்று திரும்பினேன் . அது எனது வாழ்க்கை பயணத்தை திரும்பிப் பார்த்து, கர்த்தரின் கரம் என்னை நடத்தியதற்காக அவருக்கு மகிமை அளிக்க ஒரு சிறந்த தருணமாக இருந்தது.
என் வகுப்புத் தோழர் ஒருவர், அவர் பிறந்தவுடனேயே, அவரது தந்தை மற்றும் அவரது தாத்தா இருவரும் அந்த கல்லுரியிலிருந்து பட்டம் பெற்றதால், அவர் சி. இ. ஜியில் தான் பட்டம் பெற வேண்டும் என்று குறிக்கப்பட்டார் என்று கூறினார் . ஆனால் என்னுடைய வாழ்க்கை அப்படி இல்லை. கணிதத்தில் பட்டம் பெற நான் B.Sc படிப்பதற்காக திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் என் தந்தை சென்னைக்கு மாற்றப்பட்டபோது, அவரது நண்பரின் மகள் பொறியியல் படிக்கிறார் என்பதை அவர் அறிந்தார், அதனால் அவர் என்னை சி. இ. ஜி. யில் சேர்த்தார் . அது கடவுளின் கரம் தவிர வேறில்லை! திரும்பிப் பார்க்கும்போது, என் இதயம் நன்றியால் நிரம்பியுள்ளது, நான் தாவீதுடன் சேர்ந்து, "ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்." (சங்.145:1-2) என்று போற்றுகிறேன்.
இந்த சங்கீதத்தை நான் திரும்பவும் திரும்பவும் படிக்கும்போது, சங்கீதக்காரன் ஆண்டவரின் படைப்புகளைப் புகழ்ந்து, அவர் புகழை தலைமுறை தலைமுறையாக சொல்ல வேண்டும் என்ற காரியம் என் கவனத்தை ஈர்த்தது! இது கர்த்தரின் செயல்களை நினைவில் வைத்து மற்றவர்களுக்குக் சொல்லி மற்றும் பின்வரும் சந்ததியாருக் கும் சொல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. நமது வெற்றியை நாம் பின் சந்ததியாருக்குச் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் கடவுளின் சக்திவாய்ந்த செயல்ளை நாம் மற்றவர்களுக்கு கூற வேண்டும். எனது அன்றாட வாழ்க்கையில் அவர் உண்மையுள்ளவராயிருந்தது, எனது தோல்விகளில் அவர் கருணை காட்டினது மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளின் அவர் வழி நடத்தியது இவைகளை நமது பிள்ளைகளுக்கு சொல்வதற்கு கடமை பட்டிருக்கிறோம். நம் வாழ்க்கைக் செயல்ளை நாம் உண்மையாகச் சொல்லும்போது, அடுத்த தலைமுறைக்கு நமது சாதனைகளை விட மிகவும் மதிப்புமிக்க ஒன்றை வழங்குகிறோம் அது "கடவுளின் விசுவாசத்தில் நங்கூரமிடப்பட்ட நம்பிக்கை" ஆகும் .
நமது பின்வரும் சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லும் காரியங்கள் நம் சம்பாதித்தவற்றால் மட்டும் அளவிடப்படுவதில்லை, நம் விசுவாசம், கடவுளை நாம் எப்படி நம்பினோம், மற்றவர்களை நாம் எப்படி நேசித்தோம், இழப்பின் நடுவே எப்படி நம்பிக்கையுடன் இருந்தோம் என்பவைகள் மூலமே அளவிடப்படுகிறது.
என் நண்பரே, நீண்ட கால பிரிவுக்குப் பின் திரும்பவும் சந்திக்கும்போது நாட்கள் கடந்தாலும் கடவுள் உண்மை உள்ளவர் என்பதை நினைவூட்டுகிறது. தலைமுறை தலைமுறையாக நாம் உயிருள்ள விசுவாசத்தின் உக்கிராணக்காரராக மற்றவர்களுக்கு அதை கொடுக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்.
ஜெபம்:- கர்த்தராகிய இயேசுவே, இத்தனை ஆண்டுகளாக என்னுடன் இருந்ததற்கும், என்னைப் பாதுகாத்ததற்கும், என்னை வழிநடத்தியதற்கும் நன்றி. எனக்கு பின் வருபவர்கள் உம்மை அறிந்து உம்மை நம்பும் வகையிலும் உம்முடைய நற்குணம் என் வாழ்வில் தெளிவாகத் தெரியும் வகையிலும் வாழ எனக்கு உதவி செய்யும் . ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
