WhatsApp
WhatsApp

உலகப்பிரகாரமான மற்றும் பரிசுத்த வாழ்க்கை

Aug 08, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி: கொலோசெயர் 3:17-24

 

பரிசுத்த வாழ்க்கைக்கும் உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடு குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றனவழிபாடுஜெபம்பைபிள் வாசிப்பு மற்றும் தேவாலய நடவடிக்கைகள் புனிதமானவை என்றும்அலுவலக வேலைவணிகம்சமையல்படிப்புவாகனம் ஓட்டுதல்சுத்தம்செய்தல் அல்லது  குடும்பங்களை கவனித்துக்கொள்வது ஆகியவை வெறுமனே உலகப்பிரகாரமான வாழ்க்கை  என்றும் நினைக்கிறார்கள். ஆனால்வேதம் வித்தியாசமான ஒரு காரியத்தைக் காட்டுகிறது.

 

கிறிஸ்துவைப் பின்பற்றுபவருக்குமுழு வாழ்க்கையும் பரிசுத்தமே. வாழ்க்கையின் எந்தப் பகுதியும் கடவுளின் பிரசன்னத்திற்கு அல்லது அவரதுபிரபுத்துவத்திற்கு வெளியே இல்லைஒவ்வொரு கணமும் அவருக்கே சொந்தமானதுஏனென்றால் அவர் நம்மைப் படைத்தார்நம்மை மீட்டுக்கொண்டார்மேலும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்கிறார்

 

"வார்த்தையினாலாவதுகிரியையினாலாவதுநீங்கள் எதைச் செய்தாலும்அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்துஅவர்முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்" (கொலோசெயர் 3:17). என்றும், "ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச்செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரிந்தியர் 10:31) என்றும் வேதம் சொல்லுகிறது.  

 

இந்த ஆலோசனைக்கு ஒரு காரணம் உள்ளதுகொலோசெயர் 3:23-24 கூறுகிறதுஃ "நீங்கள் எதைச் செய்தாலும்அதை மனுஷருக்கு அல்லகர்த்தருக்காகச்செய்யுங்கள்நீங்கள் கர்த்தராலே சுதந்தரத்தின் பலனைப் பெறுவீர்கள் என்று அறிந்திருக்கிறபடியால்கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறீர்கள்”ஒருவிசுவாசிக்குஇறைவன்தான் எஜமானன்வேலைகான திறன்அறிவுவாய்ப்பு மற்றும் ஆரோக்கியத்தை நமக்கு வழங்கியவர் கடவுள் தான்நாம் கடவுளுக்குசொந்தமானவர்கள்இதை நாம் புரிந்து கொள்ளும்போதுவாழ்க்கையின் சாதாரண பணிகள் கூட தேவனுக்கு மகிமை தரும் காரியங்களாக மாறுகின்றன.

 

இந்த உண்மை நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்!

 

நாம் 'ஞாயிறு கிரிஸ்துவர்இல்லைஒவ்வொரு கணமும் இயேசுவுக்குச் சொந்தமான சீடர்.  நமது உரையாடல்கள் உறவுகள் பணி நெறிமுறைகள் மற்றும்நமது ஓய்வு நேரங்கள் கூட கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலிக்க வேண்டும்சமையலறைவகுப்பறைபணியிடம்சந்தை மற்றும் வீட்டிலும் பரிசுத்தம் காணப்பட வேண்டும்.  ஒவ்வொரு முடிவும் கடவுளை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் மாறுகிறது.

 

என் நண்பரேஎந்த காரியமும் பரிசுத்தமா உலகப்பிரகாரமா என்பது கேள்வி அல்லகேள்வி என்னவென்றால், 'நான் இதைச் செய்யும்போது அல்லதுசொல்லும்போதுகர்த்தர் மகிமைப்படுவாரா?' என்பதே கேள்விநமது முழு வாழ்க்கையும் கிறிஸ்துவுக்கு சொந்தமானதுஒவ்வொரு கணமும் அவரைமகிமைப்படுத்த ஒரு வாய்ப்பாகும்.

 

ஜெபம்:  கர்த்தராகிய இயேசுவேஎன் வாழ்க்கை முழுவதும் புனிதமானது மற்றும் கடவுளுக்கு சொந்தமானது என்று எனக்குக் கற்பித்ததற்கு நன்றிஆண்டவரேஎனது பணிஎனது உறவுகள்எனது முடிவுகள் மற்றும் எனது அன்றாட பொறுப்புகள் மூலம் உம்மை  மகிமை படுத்த உதவி செய்யும்ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *