WhatsApp
WhatsApp

வழிபாடு என்றால் என்ன?

Jul 31, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி: யோவான் 4:23-24 

 

'அந்த தேவாலயத்தில் வழிபாட்டை  நான் விரும்புகிறேன்!' என்று மக்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன்மக்கள் திறமையான 'வழிபாட்டுத்தலைவரைபற்றி பேசுகிறார்கள்அல்லது 'வழிபாடு இன்று பரலோகமாக இருந்ததுஎன்று கூறுகிறார்கள்.   வழிபாடு என்பது பொழுதுபோக்கு அல்ல.   கடவுளைப் புகழ்ந்து பாடுவது நிச்சயமாக தேவ வழிபாட்டின் முக்கிய பகுதியாகும் (சங்கீதம் 95:1-2). 

 

அப்படியானால் வழிபாடு என்றால் என்ன?   வழிபாடு என்பது கடவுளுக்கு அன்பான கீழ்ப்படிதலுடன் வாழும் வாழ்க்கை.

 

பிதாவை உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுவார்கள், இவர்களை பிதா விரும்புகிறார் என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 4:23).  உண்மையான வழிபாடு என்பது இசையின் பாணிபாடகர்களின் தரம்பாடகரின் திறமை அல்லது பாடும் போது நாம்அனுபவிக்கும் உணர்ச்சிகளால் வரையறுக்கப்படுவதில்லைஇது கடவுளிடம் சரணடைந்த இதயத்துடன் தொடங்கிதாழ்மையான மற்றும்புனிதப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் வெளிப்படுகிறது.   வழிபாடு என்பது ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பதாகும்அது அவருக்காகவீட்டிலும்வேலையிலும்பள்ளியிலும்சந்தையிலும்தேவனுக்காக வாழ்வதே உண்மையான வழிபாடுபுனிதத்தையும் மனத்தாழ்மையையும் நாடும்கீழ்ப்படிதலின் ஒவ்வொரு செயலும் உண்மையான வழிபாடாக மாறுகிறது.

 

இந்த உண்மை புதிதல்லதனது கீழ்ப்படியாமையை பலிகளால் ஈடுசெய்ய முடியும் என்று சவுல் ராஜா நினைத்தபோது, "பலியை விட கீழ்ப்படிதல் சிறந்தது"  என்று சாமுவேல் தீர்க்கதரிசி அறிவித்தார் (1 சாம். (15:22)   வெளிப்புற மத நடவடிக்கைகளால் கடவுள் ஈர்க்கப்படுவதில்லை.   கடவுளைப் பிரியப்படுத்தும்வழிபாடு நேர்மைகருணைமன்னிப்புதாராள மனப்பான்மைமனத்தாழ்மை மற்றும் உண்மையுள்ள கீழ்ப்படிதல் ஆகியவை  மட்டுமே (மீகா 6:8).

 

நிச்சயமாகநாம் பாடல்களால் கடவுளை துதிக்க வேண்டும்நமது பாடல்கள் கிறிஸ்துவுக்கு சரணடைந்த ஒரு வாழ்க்கையின் நிறைவாகவே இருக்கவேண்டும்ஞாயிற்றுக்கிழமைகளில் நமது உதடுகள் கடவுளைப் புகழ்ந்தாலும்திங்கட்கிழமைகளில் நமது வாழ்க்கை அவரை மறுத்து விட்டால்நமது வழிபாடுபயனற்றதுதுதியின் பாடல்களில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார்ஆனால் அவருக்குக் கீழ்ப்படியும் இதயங்களில் அவர் இன்னும் அதிகமாகமகிழ்ச்சியடைகிறார்.

 

என் நண்பரேஇன்றுநாம் வழிபாட்டை அனுபவித்தோமா என்பது அல்ல, "என் வாழ்க்கை ஒரு வழிபாட்டுச் செயலாக இருக்கிறதா?" என்பதே நாம் இன்றுபதில் அளிக்க வேண்டிய கேள்வி அதுவே நமது பரலோகத் தகப்பன் நாடும் வழிபாடு.

 

ஜெபம்ஃ கர்த்தராகிய இயேசுவேஎன் எண்ணங்கள்வார்த்தைகள் மற்றும் செயல்கள்  உம் மீதான என் அன்பை பிரதிபலிக்கட்டும்.  என் வாழ்க்கை வழிபாடாக இருக்கட்டும்ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *