WhatsApp
WhatsApp

ரட்சிப்பை தொடர்ந்து கீழ்ப்படிதல்

Sep 11, 2026 By Hephzibah Stephen

வேதபாடம்எபேசியர் 2:1-10

 

என் அமைதி நேரத்தில் நான் யாத்திராகமம் புத்தகம் படிக்கத் தொடங்கியபோதுநம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை என் இதயத்தை புதிதாகநிரப்பியது.   கிருபையாக தேவன் முதலில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து காப்பாற்றினார்பின்னர் அவர்களுக்குக் கீழ்ப்படிய பத்துக் கட்டளைகளைவழங்கினார்.   நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இறைவனிடம் வரலாம்அவர் முதலில் நம்மைக் ரட்சிக்கிறார்பின்னரே அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய  நம்மை அழைக்கிறார்.

 

பத்து கட்டளைகளை வழங்குவதற்கு முன்புகடவுள் ஏற்கனவே செய்ததை இஸ்ரேலுக்கு நினைவூட்டினார்:  "அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்துஉங்களை அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே" (யாத். 20:2).   இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் கடவுள் அவர்களுக்குகட்டளைகளை வழங்கினார்.

 

கீழ்ப்படிதலுக்கு முன் ரட்சிப்புஇஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிக்க அவர்கள் முதலில் கீழ்ப்படியவேண்டும் என்று அவர் சொல்லவில்லை.  இதேகோட்பாடு புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகிறது.  "நீங்கள் கிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்கிரியைகளினால் அல்ல" (எபேசியர்2:8-9).   இயேசு சொன்னார், "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவான் 14:15).

 

நற்கிரியைகள் மூலம் நாம் இரட்சிப்பைப் பெற முடியாதுஇரட்சிப்பு என்பது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கும்.  ஆனால்பவுல் அதோடு நிற்கவில்லைஅவர் தொடர்கிறார்: "நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நற்கிரியைகளுக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட அவருடையகிரியைகளாயிருக்கிறோம்அவைகளில் நாம் நடக்கும்படி தேவன் அதை முன்னமே ஆயத்தம்பண்ணினார்" (எபேசியர் 2:10).   ஆகையால்நற்கிரியைகள்நம்முடைய இரட்சிப்பின் பலன்.

 

நமது கீழ்ப்படிதல் என்பது கடவுளின் அன்பு மற்றும் கிருபைக்கு ஒரு பிரதிபலிப்பாகும்

 

கடவுள் நம்மை நேசிக்க வேண்டும் என்பதற்காக நாம் அவருக்குக் கீழ்ப்படிய தேவை இல்லைநாம் பாவிகளாய் இருக்கும் போதே அவர் நம்மை நேசித்து நமக்காக தன ஜீவனை தந்தார் என்று வேதம் சொல்லுகிறது.  அவரது அன்பை ருசித்த நாம், அவருக்கு கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.   

 

இது கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது.  

 

என் நண்பரேஇஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின தேவன்இயேசு கிறிஸ்துவினாலே நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்துவிடுவிக்கப்பட்டோம்அந்த மீட்பின் சந்தோஷத்தைப் பெற்ற நாம்  ஒவ்வொரு நாளும் நன்றியுள்ள இதயத்துடன் விருப்பத்துடன் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

ஜெபம்ஃ பரலோகத் தகப்பனேஇயேசு கிறிஸ்துவின் மூலம் உமது கிருபையால் என்னைக் ரட்சித்ததற்கு  நன்றிநன்றியுள்ள இதயத்துடன்உம்வார்த்தைக்கு கீழ்ப்படிதலின் வாழ்க்கையின் மூலம் மூலம் உமக்கு சாட்சியாய் வாழ எனக்கு உதவும்ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *