WhatsApp
WhatsApp

அறிந்து, நேசிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்

Jul 12, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதிசங்கீதம் 139.

 

வீடியோ கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவதை உணரும்போது நாம் பதட்டமடையலாம்நம்மை கண்காணிப்பவர்களின் நோக்கம் நல்லதோ கெட்டதோ என்ற பயம் நம்மை பயப்பட வைக்கிறதுஇது எங்கள் கடைசி பேத்தியை என் நினைவுக்குக் கொண்டு வருகிறதுஅவள்  சிறுபிள்ளையாகஇருந்தபோதுஎங்கள் மருமகள் பணிபுரியும் அறையில் விளையாடுவாள்தானே விளையாடுவாள். ஆனால் தன் தாயின் பார்வையில் இருப்பதே அவளுக்கு சந்தோஷம்

 

முதல் கண்ணோட்டத்தில்சங்கீதம் 139 நம்மை கண்காணித்துக்கொண்டே இருக்கும் ஒரு கடவுளை சித்தரிக்கிறதுதாவீது கடவுளிடம் மாட்டிக்கொண்டு தப்ப முடியாமல் தவிப்பவர் போல் காணப்படுகிறார்சங்கீதத்தைத்  தொடர்ந்து வாசிக்கும் போதோகடவுளின் சர்வபிரசன்னமும் சர்வவல்லமையும்அச்சுறுத்தலாக இல்லாமல் ஆறுதலாக வெளிப்படுவதை  நாம் காணலாம்முதலில் கண்காணிப்பாகத் தோன்றுவது கடவுளின்  நிபந்தனையற்ற அன்புகவனிப்பு மற்றும் வழிகாட்டுதலின் அழகான ஒப்புதல் வாக்குமூலமாக மாறுகிறது

 

தாவீது தான் கடவுளால் முழுமையாக அறியப்பட்டு முழுமையாக நேசிக்கப்பட்டதை உணர்ந்து  மகிழ்ச்சியடைந்தான்!.  இன்று நாம் பதிலளிக்க வேண்டியகேள்வி என்னவென்றால் கடவுளின் பிரசன்னத்தில் நாம் பயப்படுகிறோமாஅல்லது பாதுகாப்பை உனர்கிறோமா?

 

சகலத்தையும் அறிந்த கடவுள் என்னை அறிவார்நான் இப்போது கடந்து வந்த பாதையை அறிந்திருந்தார்என் கண்ணீரும் என் வேதனையும் அவருடையபார்வையில் மறைக்கப்படவில்லைகடவுள் என் சார்பாக சரியான நேரத்தில் செயல்படுவார்எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டபோதுசரியான நேரத்தில்கடவுள் அவர்களை விடுவித்தார்கர்த்தர் என்னை அறிவது மட்டுமல்லாமல்முன்னும் பின்னுமாக வேலியடைத்து என்னைப்பாதுகாக்கிறார்கடவுள் தாவீதுக்கு எதுவும் வரக்கூடாது என்பதற்காக எல்லா பக்கங்களிலும் வேலி அமைத்தார்கடவுள் தம்முடைய கைகளால் நம்மைப்பாதுகாக்கிறார்இது கடவுளின் அன்பு மற்றும் அக்கறையின் வெளிப்பாடாகும்இது ஒடுக்குமுறையின் கை அல்லகிருபையின் கைகர்த்தர் என்னுடனேகூடஇருக்கும்போதுஇராக்காலமும் என்னைச் சுற்றிலும் வெளிச்சமாயிருக்கும்.

 

இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.  கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிற யாவருக்கும் இது பொருந்தும்.

 

எப்படிப்பட்ட ஒரு வாக்குத்தத்தம்அக்கினி ஸ்தம்பம் பாலைவனத்தில் இரவுகளை ஒளிரச் செய்தது போலநம்முடைய இரவுகளும் பகலைப் போல பிரகாசிக்க வைக்கிறார். (யாத்திராகமம் 13:21) தேவன் தம்முடைய திட்டத்தின்படி நம்மை வழிநடத்துகிறார்.

 

என் நண்பரேநாம் மனைவிகளாகவோகணவர்களாகவோபராமரிப்பாளர்களாகவோ அல்லது ஊழியர்களாகவோ  கவனிக்கப்படாமலும் பாராட்டப்படாமலும்இருக்கலாம்.  மற்றவர்கள் காணாத ஒவ்வொரு தியாகத்தையும் கடவுள் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்மக்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளலாம்ஆனால் கடவுள் நம்மை அன்போடு பார்க்கிறார்கடவுள் நம்மை தண்டிக்க அல்லநம்மை நிலைவரப்படுத்தவே தேடுகிறார்சோர்வடையவேண்டாம்.

 

ஜெபம்:-  கர்த்தராகிய இயேசுவேஉமது முன்னிலையில் ஆறுதலையும் உறுதியையும் பெற எனக்கு உதவும்ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *