WhatsApp
WhatsApp

கனிகொடுக்கும் வாழ்வின் இரகசியம்

Jun 22, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதியோவான் 15:5-11

 

நண்பர்களும் அறிமுகமானவர்களும் நம்மை விட்டு கடந்து போகும்போதுநாம் அவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்தபோது அவர்கள் ஏற்படுத்தியதாக்கத்தைப் பற்றியும் எண்ணி கனிதரும் வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறுகிறோம்.   நாம் வேறு சிலரை பற்றி சிந்திக்கும் போதுஅவர்களின் வாழ்க்கைவீணாகிவிட்டது என்று கூறுகிறோம்.   அவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் அல்லஆனால் அந்த தாக்கம்மனிதகுலத்திற்கு சாதகமாகவோ அல்லது பிரயோஜனமாக இல்லை என்பதாலேயே!

 

அப்படியானால்கனிகொடுக்கும் வாழ்வின் இரகசியம் என்ன?

 

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அளிக்கும் அழைப்புகளில் ஒன்று யோவான் 15 ம் அதிகாரத்தில் உள்ளது, "என்னில் நிலைத்திருங்கள்" (V 5) ஒருகிளையானது செடியுடன் இணைந்து இராவிட்டால் கனி தர முடியாது என்பது போலநாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்காவிட்டால் பலனளிக்கும் வாழ்க்கையைவாழ முடியாது.

 

நிலைத்திருப்பதைப் பற்றி மூன்று காரியங்களை இயேசு கூறுகிறார்.

 

முதலாவதாக, "என்னில் நிலைத்திருங்கள்" (v5).  நமது சொந்த திறன்களை நம்பியிருக்கும்போதுநாம் பலவீனமடைந்து பலனற்றவர்களாக மாறுகிறோம்ஆனால் நாம் தினமும் கிறிஸ்துவைச் சார்ந்திருக்கும்போதுஅவருடைய ஜீவன் நமக்குள்ளாகப் பாய்கிறது.

 

இரண்டாவதாக, "என் வார்த்தைகளில் நிலைத்திருங்கள்" (V 7) கடவுளுடைய வார்த்தை நம் ஆத்துமாவை பராமரிக்கிறதுநம் வாழ்க்கையை வழிநடத்துகிறதுநாம் வேதாகமத்தை வாசிக்கும்போதுதியானம் செய்யும்போதுகீழ்ப்படியும்போதுநம் மனம் புதுப்பிக்கப்படுகிறதுமேலும் நமது ஜெபம் கடவுளின்சித்தத்திற்கு ஏற்றவாறு அமைகிறது.

 

மூன்றாவதாக, "என் அன்பில் நிலைத்திருங்கள்" (V 9) கிறிஸ்துவின் அன்பு என்பது நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக மட்டுமல்லநாம் பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது.  "சத்துருக்களைச் சிநேகியுங்கள்உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்றுஇயேசு போதித்தார்மேலும்யோவான் 4:20-21 நாம் தேவனிடத்தில் அன்புகூறுகிறோமென்றுசொல்லும்போது சகோதரசகோதரிகளைவெறுக்கிறோமென்று சொல்ல முடியாது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறதுகிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பது என்பது நம்மை காயப்படுத்துபவர்களைமன்னிப்பதுநம்மை எதிர்ப்பவர்களை ஆசீர்வதிப்பது ஆகும் (மத் 5:44)

 

இந்த வகையான அன்பு இயற்கையானது அல்லஅது கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையின் கனியாகும்நாம் அவரில் நிலைத்திருக்கும்போதுஅவருடைய குணாதிசியங்கள் நமக்குள் உருவாகிறதுநாம் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவைப் போல் ஆகிறோம்.

 

என் நண்பரேகிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தைகளிலும் நிலைத்திருப்பதன் விளைவு ஒரு பெரிய ஆசீர்வாதம்அப்போதுதான் நம் வாழ்கை ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும். நம் வாழ்க்கை கனிகொடுத்துகடவுளை மகிமைப்படுத்தும்.

 

ஜெபம்:-  ஆண்டவரே, உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் மூலம் ஒவ்வொரு நாளும் உம்மோடு நெருக்கமாக இருக்க எனக்குக் கற்றுக் கொடுங்கள்என்இதயத்தை உங்கள் அன்பால் நிரப்புங்கள்கனி கொடுக்க எனக்கு உதவுங்கள்ஆமென்!.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *