WhatsApp
WhatsApp

ஆபிரகாமின் மூன்று சோதனைகள்

May 08, 2026 By Hephzibah Stephen

வேத பகுதி: எபிரெயர் 11:8-19

 

ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் மெச்சினார்.   அவருடைய விசுவாசம் ஆபிரகாமுக்கு நீதியாய் எண்ணப்பட்டது (ஆதியாகமம் 15:6)   ஆபிரகாமின்வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில் சோதிக்கப் பட்டது விசுவாசத்தின்  தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறதுவிசுவாசம் அமைதியான வாழ்க்கையில் அல்லகீழ்ப்படித்தலினாலேயே  நிரூபிக்கப்படுகிறது என்பதை அவரது வாழ்க்கை பயணம் காட்டுகிறது.

 

கல்தேயர்களின் உர் (Ur) என்பது நவீன ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும்ஆபிரகாமின் காலத்தில் (கிமு 2000) இது வர்த்தகம்கலாச்சாரம் மற்றும் சந்திர-கடவுள் வழிபாட்டின் மையமாக இருந்ததுகடவுள் ஆபிரகாமை அவரது வீடுபாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என தெரிந்தஅனைத்தையும் விட்டுவிட்டுஅவர் பார்த்திராதஅறியாத ஒரு நாட்டிற்குச் செல்லுமாறு அழைத்தார்.   "ஆபிரகாம் தனக்குச் சுதந்தரமாகப் பெறப்போகிறஸ்தலத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது விசுவாசத்தினாலே கீழ்ப்படிந்தான்என்று எபிரேய நூல் ஆகியோர் கூறுகிறார் (எபிரெயர் 11:8).  

 

இரண்டாவதாக, கடவுள் ஆபிரகாமுக்கு ஒரு மகனை தருவதாக வாக்குறுதி அளித்தார்ஆனாலும் அது நிறைவேறாமல் பல ஆண்டுகள்  கடந்தனகாத்திருப்பது விசுவாசத்தின் கடினமான சோதனைகளில் ஒன்று.   வேதாகமம் சொல்லுகிறது, "அவர் பொறுமையாயிருந்துவாக்குத்தத்தத்தைப் பெற்றார்என்று (எபிரெயர் 6:15).   

 

மூன்றாவதாக ஈசாக்கை பலியாக வழங்குமாறு கடவுள் ஆபிரகாமிடம் கேட்டபோது மிகப் பெரிய சோதனை வந்தது.  "நீ நேசிக்கும் உன் ஒரே மகனானஈசாக்கைக் கொண்டு மோரியா நாட்டிற்குச் சென்றுஅங்கே அவனைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்து"   தேவன் கட்டளையிட்டார் (ஆதியாகமம் 22:2)  இது கீழ்ப்படிதலுக்கான சோதனை மட்டுமல்லமுழுமையான சரணடைதலுக்கான சோதனையாகும்தேவன் மரித்தோரையும் உயிர்த்தெழுப்ப வல்லவர் என்றுஆபிரகாம் நம்பினார் (எபிரெயர் 11:19)  கடைசி நேரத்தில்கடவுள் வேறு வழியை காட்டினார்கடவுள் ஈசாக்கை பலியாக விரும்பவில்லைஆனால்ஆபிரகாமை சோதிக்க விரும்பினார்.   ஆபிரகாம் தன்னை அழைத்தவரை  நம்பினார்.

 

பெரும்பாலும்கடவுள் நம்மை படிப்படியாகவே வழிநடத்துகிறார்.  முதலிலேயே முழுவதையும் அவர் சொல்லுவதில்லை. தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுசிவசத்தால் மாத்திரமே சுதந்தரிக்க முடியும். விசுவாசத்தால் கீழ்ப்படிதல் தொடங்குகிறது.

 

கடவுள் ஆபிரகாமின் விசுவாசத்தை மெச்சினார்ஏனெனில் ஆபிரகாம் அவரை முழுமையாக நம்பினார்,   ஆபிரகாம் கடவுளின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்துஅவரது வாக்குறுதிக்காக பொறுமையுடன் காத்திருந்துதனக்கு பிரியமான மகனையும் அர்ப்பணித்த விசுவாசம் இன்று நமக்கு சவாலாக இருக்கிறது.

 

என் நண்பரேசெய்வதறியாது திகைக்கும் நேரத்தில் தேவனை அண்டுங்கள்போராட்டங்களின் வேளையில் தேவனை பற்றிக்கொள்ளுங்கள்விசுவாசத்தில்நிலைத்திருக்க வேத வசனங்களை தியானியுங்கள்இதுவே வெற்றியின் வழிஆபிரகாமை ஆசிர்வதித்த தேவன் நம்மையும் விடுவித்து காப்பார்..

 

ஜெபம்:  ஆண்டவரேஉமக்கு கீழ்ப்படிந்துசரணடையும் நம்பிக்கையை எனக்கு தாரும்என் விசுவாசத்தை பெருகப்பண்ணும்ஆமென்.

 


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *