WhatsApp
WhatsApp

உயிர்த்தெழுந்த கிறிஸ்து

Apr 10, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி: யோவான் 20:11-18

அநேக ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, கனத்த இதயத்துடனும் கண்ணீர் நிறைந்த கண்களுடனும் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். நான் சாலையைக் கடக்க நின்ற போது, ஒரு ஆட்டோ ரிக்க்ஷா என்னைக் கடந்து சென்றது. அந்த ஆட்டோவின் பின்புறத்தில் எழுதப்பட்ட வேத வசனம் இப்போது என் நினைவில் இல்லை, ஆனால் அந்த வசனம் எப்படி என் உள்ளத்தை தொட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது. உடனடியாக ஓர் இருள் என்னை விட்டு வெளியேறியதையும், ஒரு ஒளி என்னை நிரப்பியதையும் உணர்ந்தேன்.  அந்த நாளில் அந்தப் பாதையில் இயேசு என்னைச் சந்தித்து எனக்கு ஆறுதலை தந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவரைப் பின்பற்றுவோருக்கு பல்வேறு இடங்களில் தன்னை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்புகளைப் பற்றி வியக்கவைக்கும் விஷயம் என்னவென்றால், இயேசு அவர்களை கோவிலிலோ அல்லது ஏதேனும் புனித இடத்திலோ சந்திக்காமல் அவர்களின் வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் சந்தித்தார்.  நாம் எங்கிருந்தாலும், நாம் அன்றாட வாழ்க்கையை நடந்தும் போது உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம்முடன் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது!

மகதலேனா மரியாள் துக்கத்துடன் உயிர்த்தெழுந்த ஆண்டவரை தேடிக்கொண்டிருந்த போது அவரை கல்லறையில் சந்தித்தாள்.  துக்கப்பட்டு அச்சத்தால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த சீடர்கள் அந்த அறையில் இயேசுவைக் கண்டனர். எம்மா ஊர் செல்லும் வழியில் இரண்டு சீஷர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரைச் சந்தித்தனர். பின்னர், கலிலேயா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு மீண்டும் தோன்றினார்.

ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுடைய துக்கம், பயம், கவலை அல்லது வேலைகளின் நடுவே அவர்கள் இருந்த இடத்திலே நடந்தது.

இது உயிர்த்தெழுதலின் முக்கிய உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது; 

உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு விசேஷமான இடங்களில் அல்லது நிகழ்வுகளில் மட்டுமல்ல, நம் வாழ்வின் அன்றாட சூழ்நிலைகளில் நம்மை சந்திக்கிறார்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இல்லை.  நாம் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவர் நம்முடன் நடந்து செல்கிறார். நாம் குழப்பமடைகிறபோது, அவர் தனது வார்த்தையின் மூலம் நமக்கு அறிவூட்டுகிறார். நாம் பயப்படும்போது அல்லது சோகமாக இருக்கும்போது, அவர் நமக்கு ஆறுதல் அளிக்கிறார். நாம் கோபப்படும்போது, அவர் நம் இதயங்களுக்கு அமைதியைக் கொண்டுவருகிறார். நாம் தோல்வியடைந்ததாக உணரும்போது, அவர் நம்மை சந்தித்து  அவருடைய பணிக்காக நம்மை மீண்டும் புதுப்பிக்கிறார்.

என் நண்பனே!  இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவுகூறும் போது அவர் இன்று நம்முடன் நடந்து செல்கிறார் என்பதை  நினைவூட்டுகிறது. உங்கள் அன்றாட வேலைகளைச் செய்யும்போது, உயிர்த்தெழுந்த கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார் என்ற உண்மையை நினைவு கூறுங்கள்.  உங்களுடைய வாழ்க்கை,  வேலை, போராட்டங்கள், தீர்மானங்கள், மற்றவர்களோடுள்ள உறவுகளிலும் அவரை அழையுங்கள். ஆண்டவர் நமக்கு அமைதியைத் தருவாராக!

ஜெபம்:  உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் உம்முடைய பிரசன்னத்தை உணர எனக்கு உதவுங்கள். உம்மை நம்பவும், கீழ்ப்படியவும் எனக்கு உதவுங்கள். என்னுடன் நடந்து, என்னை போதித்து, உம்முடைய  நோக்கத்திற்காகவும் மகிமைக்காகவும் என் வாழ்க்கையை பயன்படுத்தும். ஆமென்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *