WhatsApp
WhatsApp

கடவுளுக்கு தோத்திரம்

Jan 30, 2026 By Hephzibah Stephen

வேத பாடம்: கொரிந்தியர் 2:12-17

"கடவுளுக்கு தோத்திரம் " என்ற சொற்றொடரை, பவுல் தனது நிரூபங்களில் ஆறுமுறை உபயோகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும்
இத்தொடர் நன்றியுணர்வின் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
ரோமர் 6:17 ல், நற்செய்திக்குக் கீழ்ப்படிந்த விசுவாசிகளுக்காக பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். ரோமர் 7:25 ல் பவுல் இயேசு
கிறிஸ்துவின் மூலம் பாவத்தின் வல்லமையிலிருந்து இரட்சிப்பை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார். 1 கொரிந்தியர்
15:57ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்ததற்காக தேவனை தோத்திரிக்கிறார்.
2 கொரிந்தியர் 2:14ல் பவுல் கடவுள் தன்னை வழிநடத்தியதற்காகவும், கர்த்தருடைய அறிவை அவர் மூலம் பரப்பியதற்காகவும்
கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். 2 கொரிந்தியர் 8:16 ல் பவுல், தீத்துவின் இதயத்தின் மீது அதே சுமையை வைத்ததற்காக கடவுளுக்கு
நன்றி தெரிவிக்கிறார். நன்றி செலுத்துவதற்கான இறுதி காரணமாக 2 கொரிந்தியர் 9:15 ல், கிறிஸ்துவின் மூலம் ரட்சிப்பு
அருளப்பட்ததற்காக பவுல் தேவனை தோத்திரிக்கிறார்.
பவுல் இந்த சொற்றொடரை ஏனோ தானோ என்று பயன்படுத்துவில்லை. "கடவுளுக்கு தோத்திரம் " என்று அவர் கூறும்போது, அவர்
இரட்சிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் கடவுளின் முன்முயற்சியை ஒப்புக்கொள்கிறார், கடவுள் விசுவாசிகளிலும் அவரது ஊழியத்திலும்
என்ன செய்தார் அல்லது செய்கிறார் என்பதைக் கொண்டாடுகிறார், மேலும் இந்த சொற்றொடர் தந்தையான கடவுளுக்கு, எப்போதும்
'இயேசு கிறிஸ்துவின் மூலமாகச் செலுத்தப்படுகிறது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
பவுலின் "கடவுளுக்கு தோத்திரம் " என்ற ஆறு அறிவிப்புகள் இன்றும் நமக்கு வலுவான, நடைமுறை பயன்பாட்டைக் கொண்ட
கிறிஸ்தவ வாழ்க்கை முறையை காட்டுகின்றன.
பாவத்தை வெல்லும் சக்தியை கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். எனவே, பாவத்தில் தொடர்ந்து இருப்பதற்கு சாக்குப் போக்கு
சொல்லமுடியாது. நம் வாழ்க்கையின் மன்னிப்புக்கு மட்டுமல்ல மாற்றத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், கடவுள் நமக்கு நித்திய
ஜீவனை உறுதியளித்துள்ளார், எனவே, மரணத்தின் வல்லமை உடைக்கப்படுகிறது.
கொடுப்பது என்று வரும்போது, கடவுள் தனது குமாரனை சிலுவைக்கு அனுப்பியதை பவுல் அழகாக நினைவூட்டுகிறார், மேலும் அதை
சொல்லி முடியாத பரிசு என்று அழைக்கிறார். இந்த உணர்தல் நம்மை தாராளமாக கொடுக்க ஊக்குவிக்க வேண்டும். கிறிஸ்துவின்
உன்னதமான தியாகமானது நாமும் தியாகம் செய்ய நம்மை ஊக்குவிக்க வேண்டும்!
என் நண்பரே, இன்று நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி என்ன?, என் வாழ்க்கை முற்றுமாய் மாற்றப்பட்டிருக்கிறதா? நான்
ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து வளருகிறேனா? கடவுள் என் ஆசைகளை மாற்றியமைக்கிறாரா? நான் கொடுப்பது தியாகமா? நம்முடைய
வாழ்க்கை முற்றுமாக மாற்றப்படும்போதுதான் அவை நறுமணமாக மாறும், இறைவனை குறித்த அறிவைப் பரப்பும்.
ஜெபம் : கர்த்தராகிய இயேசுவே, காரியங்கள் சரியாக நடக்கும்போது மட்டுமல்லாமல், நீங்கள் என்னிலும், என் மூலமாகவும், எனக்கு
அப்பாலும் செயல்படுவதால் நன்றி சொல்ல எனக்குக் கற்றுக் கொடுங்கள். ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *